மதுரை: அலுவலக தகவல் தொடர்புகள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் சான்றளிக்கப்பட்ட உத்தரவுகளில் கூட எழுத்து பிழைகள், இலக்கண பிழைகள் உள்ளன. ஆங்கில கலப்பின்றி சுத்தமான தமிழில் பேச முடியாது; அதே நேரம் தமிழில் எழுதும்போது பிழையின்றி எழுத வேண்டும். பாரதியார் கூறியது போல் தாய்மொழியான தமிழ் மொழியை கொலை செய்வதை ஏற்க முடியாது. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது என்று சொல்லுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
The post தமிழில் பிழையின்றி எழுத வேண்டும்: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.