மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மாயா (33), செல்வம் (24), மகேந்திரன் (30) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ரவடி கொலையில் 3 பேர் கைது appeared first on Dinakaran.