முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திலும் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவிலும் அமைச்சர்கள் ஆய்வு

சென்னை : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். ரூ.15 கோடியில் காலநிலை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவித்தார்.

தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்தகிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பணிகளை விரைவாக முடிக்க முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுத்தியுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைய உள்ளது. தீபாவளிக்கு பிறகே முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்படும்*

இதன்பிறகு தாம்பரம் முடிச்சூர் வெளிவட்ட சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஆகியோர் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கரில் 170 பேருந்துகள் நின்று செல்லும் விதமாக புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. ஆம்னிபஸ் ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் வசதிக்காக, குளியலறை மற்றும் கேன்டீன் வசதியுடன் கூடிய இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

இதன்மூலம் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல எளிதாக இருக்கும். அடுத்த மாத இறுதிக்குள் முடிச்சூா் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், வெளிவட்ட சாலையில் 50 மீட்டா் அகலத்துக்கு காலி இடங்களில் ரூ. 12 கோடி மதிப்பில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் திறந்தவெளி திரையரங்குகள், உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, யோகா புல்வெளி, நடைப்பயிற்சி அரங்கம் உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன. மீதமுள்ள 53 ஏக்கா் இடத்தை மாற்று பயன்பாட்டுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தாம்பரம் முடிச்சூர் வெளிவட்ட சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஆகியோர் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

The post முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திலும் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவிலும் அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: