The post எம்.எஸ்.தோனி 42 appeared first on Dinakaran.
எம்.எஸ்.தோனி 42

இந்திய அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று தனது 42வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். இந்திய அணிக்கு தலைமையேற்று ஐசிசி டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 அந்தஸ்து, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டம்… என கிரிக்கெட் வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனை கேப்டனாக முத்திரை பதித்துள்ள தோனிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் நட்சத்திரங்கள், பல துறைகளை சார்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். கார் விபத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்குப் பின்னர் முழு உடல்தகுதியை பெறுவதற்காகப் போராடி வரும் இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், கேக் வெட்டி தோனியின் பிறந்த நாளை கொண்டாடியது ரசிகர்களை நெகிழ வைத்தது. ஐதராபாத்தில் தோனிக்கு வைக்கப்பட்ட பிரமாண்ட கட் அவுட்டும் வைரலாகி உள்ளது.