உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுத உதவி


வாஷிங்டன்: உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்தது. உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது முதலே, உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷ்ய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும்.

இந்த தொகுப்பில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ராக்கெட்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

The post உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுத உதவி appeared first on Dinakaran.

Related Stories: