×

மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன: ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்

டெல்லி: மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன என ஒன்றிய அரசு மீது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடியும், பேங் ஆப் பரோடா பயர்களிடமிருந்து மொத்தமாக ரூ.386 கொடியும் வங்கிக் கணக்கில் மாதாந்திரமாக மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும். மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடிவரை வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவித்துள்ளார் அதில்,

*மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன.

*தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, ‘மினிமம் பேலன்ஸ் இல்லை’ எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது.

*மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் திறக்கப்பட்ட கதவுதான் இந்த அபராத நடைமுறை.

*இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள் என புரிந்துகொள்ளுங்கள். சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன: ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,amrita ,Rahul Gandhi ,Union Govt. Delhi ,Lok ,Sabha ,Union government ,
× RELATED ராகுலுக்கு எதிராக தொடர் சர்ச்சை...