×

தஞ்சை பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் சிபிஐ தகவல்

தஞ்சை பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுமி மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து, அப்பள்ளியின் விடுதியில் தங்கினார். அவர் 2022 ஜன.9 ல் விடுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். விடுதி அலுவலர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மகளின் உடல்நிலை குறித்து தந்தைக்கு தெரிவித்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். உடல்நிலை சரியில்லாமல் மாணவி தொடர்ந்து வாந்தி எடுத்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் மாணவி 2022 ஜன.19 ல் இறந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்தனர். விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அழைத்ததாக மாணவி கூறியதாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி 2022 ஜன.31 ல் உத்தரவிட்டனர்.

திருச்சி நீதிமன்றத்தில் சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கு எதிராக சகாயமேரி,’மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று பதிலளித்த சிபிஐ, வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது.

மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது” என தெரிவிப்பு தெரிவித்தது. இறந்துபோன மாணவி தரப்பு வாதத்திற்காக வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை செப்.24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

The post தஞ்சை பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் சிபிஐ தகவல் appeared first on Dinakaran.

Tags : iCourt ,CBI ,Tanjay ,Michaelpatti ,Tuya Cardiac Secondary School ,Tanzhi ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு...