பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பை பிரிப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்: எம்.கே.மோகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பை பிரித்து வழங்குவது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை எம்.கே.மோகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நோய்த்தொற்று தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் குப்பையை முறையாக வகைப் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

முகாமை அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு துணிப்பைகளை வழங்கினார். மேலும், மாணவிகளுக்கு நோய்த்தொற்று தடுப்பு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பையை மக்கும், மக்காத குப்பை என்று முறையாக வகைப்பிரித்து அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் காணொலி காட்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், மாணவியர், ஆசிரியர்கள் அனைவருக்கும் ரிபெல் புட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் 800 துணிப்பைகளும், பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. முகாமில், கவுன்சிலர் மெட்டிலா கோவிந்தராஜன், மண்டல அலுவலர் டி.பரிதா பானு, சுகாதாரக கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர் ஷீலா, ரிபல் புட்ஸ் தென்னிந்திய தலைவர் குலின் ஷா, தலைமை ஆசிரியை சின்ன வெள்ளைத்தாயி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பை பிரிப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்: எம்.கே.மோகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: