தவறான, வன்முறை செயல்களை தடுக்க ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி காமிரா

புதுடெல்லி: ரயில்களில் பயணிகள் சிலர் அத்துமீறி நடந்து கொள்வதை விசாரிக்க டிக்கெட் பரிசோதகர்கள் முயலும்போது வாக்குவாதத்தில் துவங்கி கைகலப்பில் முடிந்துவிடுகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு உடலில் பொருத்தக் கூடிய கண்காணிப்பு கேமராக்களை வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக “மும்பை பிரிவில் பணியாற்றும் 50 பரிசோதகர்களுக்கு முதற்கட்டமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்து, 2 பேருக்கு கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நாய், பூனைகளுக்கு ரயிலில் அனுமதி: செல்ல நாய்கள், பூனைகளை ரயில் பயணத்தில் உடன் எடுத்துச்செல்ல முடியாது. இப்போது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது நாய் மற்றும் பூனைகளை எடுத்து செல்லும் வசதியை தொடங்க ரயில்வே அமைச்சகம் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது.

The post தவறான, வன்முறை செயல்களை தடுக்க ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி காமிரா appeared first on Dinakaran.

Related Stories: