நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நெல்லை: நெல்லையில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில் வெளியிட்டுள்ளதாவது; தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகருக்கும் – ஒவ்வொரு கிராமத்துக்கும் தேவையான திட்டங்களைத் தந்து அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

அந்த வகையில், திருநெல்வேலியில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பது மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றோம். இந்த நிகழ்வில், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில், ரூ.85.56 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையம் – டார்லிங் நகரில் ரூ.6.44 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு அரங்கம் உட்பட ரூ.137.31 கோடி மதிப்பில், பணிகள் நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைத்தோம்.

குறிப்பாக, நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.435.18 கோடி மதிப்பில் அம்பாசமுத்திரம் ஒன்றியம் – களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம். எல்லோருக்கும் எல்லாம் என்பது போல – எல்லா ஊர்களுக்கும் எல்லாம் என்கிற வகையில் நம் திராவிட மாடல் அரசு உறுதியுடன் செயல்படும் என உரையாற்றினோம் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: