The post அமைச்சர் பதவிக்கு ஏராளமானோர் வெயிட்டிங்: மகாராஷ்டிரா குழப்பம் குறித்து கட்கரி கிண்டல் appeared first on Dinakaran.
அமைச்சர் பதவிக்கு ஏராளமானோர் வெயிட்டிங்: மகாராஷ்டிரா குழப்பம் குறித்து கட்கரி கிண்டல்

- மகாராஷ்டிரா
- நாக்பூர்
- முதல் அமைச்சர்
- ஏக்நாத் ஷிண்டே
- சிவ் சேனா-பாஜ்
- என்சிபி
- அஜித் பவார்
- கட்கரி
- தின மலர்
நாக்பூர்: மகாராஷ்டிரா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜ அமைச்சரவையில் என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் கடந்த 2ம் தேதி திடீரென சேர்ந்தார். இந்நிலையில், நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில்,‘‘ ஒருவர் தான் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தால்,அவர் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் வாழ்கிறார் என அர்த்தம். தற்போது கவுன்சிலர்கள் எம்எல்ஏவாக முடியவில்லை என்றும், எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக முடியவில்லை என கவலைப்படுகின்றனர். நல்ல துறை கிடைக்கவில்லை என அமைச்சர்கள் வருத்தப்படுகிறார்கள். அமைச்சர் ஆவதற்கு தங்களுக்குரிய முறை எப்போது வரும் என சிலர் காத்திருக்கின்றனர். இதற்காக கோட் – சூட் தைத்து வைத்து தயாராக உள்ளனர். கோட் சூட் இருந்து என்ன பயன்? அதற்கு கடும் போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் 2200 பேர் வரை அமரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு மேல் ஆட்கள் வந்தாலும் அரங்கத்தில் அமர வைக்கலாம். ஆனால், அதுபோல், ஒரு மாநிலத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது’’ என தெரிவித்தார்.