The post அமைச்சர் அன்பில் மகேஷூக்கு முதல்வர் பாராட்டு மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து உலகத்தர தொழில்நுட்ப கல்வி appeared first on Dinakaran.
அமைச்சர் அன்பில் மகேஷூக்கு முதல்வர் பாராட்டு மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து உலகத்தர தொழில்நுட்ப கல்வி

சென்னை: மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து உலகத்தரத்திலான தொழில்நுட்ப கல்வி வழங்க முயற்சி செய்யும் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: தம்பி அன்பில் மகேஷ் அமெரிக்க பயணத்தின்போது, ஊரக பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்ப கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை மேற்கொள்ளும் முன்முயற்சிகளை பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். தமிழர்களின் இதய துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள். கல்வியிற்சிறந்த தமிழரென பார் போற்ற பாடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.