அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களிடமிருந்து ₹22 லட்சம் பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களிடமிருந்து ₹22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்”அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்கள், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடந்தது. மேலும், லக்கி டிரேடர்ஸ் டையிங் நிறுவன அலுவலகத்திலும்சோதனை நிறைவு பெற்றது.

இதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் தொடர்பான 6 இடங்களில் சோதனை நிறைவு பெற்றது.
இந்நிலையில் அமலாக்கத்துறை டிவிட்டர் பக்கத்தில் வெளியான தகவல்: அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வெளியிட்டுள்ளது. அதில் 9 இடங்களில் நடந்த சோதனையில், ரூ.22 லட்சம் ரொக்கம்,, ரூ.16 லட்சம் கணக்கில் வராத பொருட்கள் மற்றும் 60 நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களிடமிருந்து ₹22 லட்சம் பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: