- அமைச்சர் ஏ. முதலியார். வேலு
- திண்டிவனம்
- கிருஷ்ணகிரி
- மயிலம் சிவகுமார்
- Bamaka
- சட்டப்பேரவா
- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை
- அமைச்சர் ஏ. முதலியார்.
சட்டப்பேரவையில் மயிலம் சிவகுமார் (பாமக) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, ‘‘திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-66 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சார்ந்தது. தற்போது 182 கி.மீ. நீளமுள்ள சாலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த பகுதியில் ரயில்வே பாலம், சிறுபாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை அழைத்து, விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அமைச்சர் எ.வ.வேலு தகவல் திண்டிவனம்-கிருஷ்ணகிரி இருவழி சாலை பணி ஆகஸ்டில் முடியும் appeared first on Dinakaran.