- செட்டிகுளம் ஏகம்பேரேஸ்வரர் கோயில்
- சுப்பிரமணியார்
- ஏகம்பேரேஸ்வரர் கோயில்
- அலத்தூர் தாலுகா செட்டிகுளம்
- Dandayudapani
- சுவாமி மலாய்கோ
- வடபழனி
- அலத்தூர் தாலுகா செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்
- செட்டிகுளம் எகம்பிரஸ்வரர்
- கோவில்
பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியருக்கு நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. நேற்று கந்தசஷ்டி விழாவினையொட்டி கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தனர். அப்போது கோவில் முன்பு உள்ள வீதியில் சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார். இன்று காலை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதனையொட்டி கோவில் கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை மற்றும் பெரம்பலூர் மாவட்டமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
The post செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.