15,000 லிட்டர் குடிநீர் பாட்டில்கள்,1,380 கிலோ அரிசி, 40 கிலோ பருப்பு உள்ளிட்டவை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அரிசி, எண்ணெய், ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் லாரிகளில் வந்து சேர்ந்தது. நாமக்கல்லில் இருந்து சென்னை வந்த நிவாரணப் பொருட்கள் திருவொற்றியூர் முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் உள்ள பச்சமுத்து கல்வி நிறுவனம் ஒன்று 50 டன் அரிசியை சென்னைக்கு அனுப்பி வைக்கிறது. கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5,000 போர்வைகள், 5000 குடிநீர் பாட்டில்கள், மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னைக்கு வரும் நிவாரணப் பொருட்கள் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகின்றன.
The post மிக்ஜாம் புயல்…உணவு, மருந்து பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டும் பிற மாவட்டங்கள் : சென்னைக்கு குவியும் நிவாரணப் பொருட்கள்!! appeared first on Dinakaran.