×

தூய மைக்கேல்ஸ் அகாடமி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

*பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

நாகப்பட்டினம் : சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கருவேலங்கடை தூய மைக்கேல்ஸ் அகாடமி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை மூத்த முதல்வர் சுசுன் ஆல்பிரெட் தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் மாணவர்கள் விநியோகம் செய்தனர்.

போதைப்பொருளை தவிர்ப்பதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எடுத்துக் கூறுவதாகவும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

போதைப்பொருள் உபயோகத்தின் தீய விளைவுகள் குறித்து விவாதங்கள் மற்றும் விரிவுரைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

சுப்பிரமணியன், நளினி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். கருவேலங்கடை தூய மைக்கேல்ஸ் அகாடமியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை கடைபிடிப்பது, போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக அமைந்தது.

The post தூய மைக்கேல்ஸ் அகாடமி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Drug Eradication Day Awareness Rally ,Thuya Michaels Academy ,Nagapattinam ,International Drug Eradication Day ,Karuvelangad ,Senior Principal ,Susun Alfred ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...