மெக்சிகோவில் 42 பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து: 18 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ: மேற்கு மெக்சிகோவில் இன்று அதிகாலையில் 42 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பேருந்து மெக்சிகோ நகரத்திலிருந்து அமெரிக்காவின் எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குப் புறப்பட்டது. ஆகஸ்ட் 3, 2023 அன்று வெளிநாட்டு மற்றும் உள்ளூர் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வடமேற்கு மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 23 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகவும்” கடினமாக இருந்தாலும் மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.

 

 

 

 

 

The post மெக்சிகோவில் 42 பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து: 18 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: