இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனிக்கிழமை (அக்.23 முதல் 28) வரை ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழையானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் லேசான மழையானது மயிலாடுதுறை, தேனி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களிலும், காரைக்காலின் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.