சென்னை கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம், மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் பேராசிரியர் சிவசங்கர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமக்கப்பட்டுள்ளார்.

அதே போல, பேராசிரியர் பவானி கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ரவிக்குமார் ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத்துறையின் பேராசிரியர் ராமலட்சுமி கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் பேராசிரியர் குமரவேல் திருச்சி மருத்துவ கல்லூரி முதல்வராகவும், மதுரை மருத்துவக் கல்லூரியின் இஎன்டி பேராசிரியர் அருள் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் பேராசிரியர் அமுத ராணி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கதிரியக்க நோயறிதலின் பேராசிரியர் தேவி சேலம் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி தோல் துறை பேராசிரியர் கலைவாணி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி இஎன்டி பேராசிரியர் முத்து சித்ரா தேனி மருத்துவர் கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி உடல்கூறியல் பேராசிரியர் லோகநாயகி கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயசிங் விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி உடல் கூறியல் பேராசிரியர் ரோகினிதேவி வேலூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: