The post இறைச்சி கொள்முதல் ஊழல் வழக்கில் முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரலுக்கு விரிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து appeared first on Dinakaran.
இறைச்சி கொள்முதல் ஊழல் வழக்கில் முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரலுக்கு விரிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

சென்னை: இறைச்சி கொள்முதல் ஊழல் வழக்கில் முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரலுக்கு விரிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில் 1987-ல் அமைதிப்படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். அமைதிப்படை வீரர்களுக்கான இறைச்சி கொள்முதலில் ஊழல் செய்ததாக அப்போதைய ராணுவ மேஜர் ஜெனரல் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ராணுவ மேஜர் ஜெனரல் குப்தாவுக்கு 2013-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேஜர் குப்தா தரப்பில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.