கோடம்பாக்கம் பகுதியில் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார் மேயர் பிரியா

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல்துறையுடன் இணைந்து அப்புறப்படுத்தும் பணியினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம், மண்டலத்திற்குட்பட்ட பனகல் பார்க் அருகில் உள்ள பிரகாசம் சாலையில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல்துறையுடன் இணைந்து அப்புறப்படுத்தும் பணியினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கோடம்பாக்கம் மண்டலம், பிராகசம் சாலையில் 3 வாகனங்களும், ஜி.என்.செட்டி சாலையில் 2 வாகனங்களும் ஒய் பாளம்
(Y Bridge) அருகில் 1 வாகனம் மாம்பலம் பிரதான சலையில் 2 வாகனங்களும் கண்ணதாசன் தெருவில் 2 வாகனங்கள் காவல்துறை உதவியுடன் இன்று அப்புறப்படுத்தப்பட்டது.

கோடம்பாக்கம், மண்டலம் பனகல் பார்க் அருகில் உள்ள பிரகாசம் சாலையில் காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியினை மேயர் ஆர்.பிரியா, இன்று (09.09.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மேயர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் 1,308 வாகனங்கள் கண்டறியப்பட்டது. இது குறித்து ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்து. இதனைத் தொடர்ந்து 30 வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமையாளர்கள் தாமாக முன்வந்து சம்பத்தப்பட்ட வாகனத்தின் ஆவனங்களை காண்பித்து எடுத்துச் சென்றனர். செப்டம்பர் 1ஆம் தேதி எழும்பூர், மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 27 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.  கோடம்பாக்கம் மண்டலத்திற்க்குட்பட்ட தி.நகர் பகுதியில் கேட்பாரற்று 16 வாகனங்கள் இருப்பது கண்டயறியப்பட்டது.

இதில் 6 வாகன உரிமையாளர் தாமாக முன்வந்து தங்களது வாகனத்தை எடுத்துச் சென்றனர். மீதமுள்ள 10 வாகனங்கள் சென்னை மாநகராட்சியின் சார்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. செனாய் நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தின் அருகில் சென்னை மாநகராட்சியின் இடத்தில் இந்த வாகனங்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஆய்வின்போது, துணை மேயர் மு.மகேஷ்குமார், கோடம்பாக்கம் மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் கே.ஏழுமலை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கோடம்பாக்கம் பகுதியில் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Related Stories: