நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம்: சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. சென்னையில் நடந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், நீட் தேர்வை திணித்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கியது.

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்­னை­யில் உள்ள 6 மாவட்­டங்­க­ளுக்­கும் சேர்த்து, கலை­வா­ணர் அரங்­கில் இந்த நிகழ்ச்சி நடை­பெ­ற்றது. இது தவிர, மீதி 66 மாவட்­டங்­க­ளுக்­கும் தனித்­த­னி­யாக இந்­தக் கையெ­ழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு திமுக மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு பேச்சாளர் பங்கேற்று, மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு குறித்தும், அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

50 நாட்­க­ளில் 50 லட்­சம் கையெ­ழுத்­து­க­ளைப் பெறும் வகை­யில் நம் தமிழ்­நாட்டு மக்­க­ளின் மன­நி­லையை இந்­திய ஒன்­றி­யத்­துக்கு உணர்த்­தும் வகை­யில் இந்­தக் கையெ­ழுத்து இயக்­கம் நடத்தப்பட உள்ளது. மக்­க­ளின் கையெ­ழுத்­து­க்க­ளைப் பெறு­வ­தற்­கா­கப் போஸ்ட் கார்ட் மற்­றும் இணை­ய­த­ளம் பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது. அனை­வ­ரின் கையெ­ழுத்­தை­யும் டிஜிட்­ட­லா­கப் பெறப்பட்டது. 50 நாட்­க­ளில் பெறப்­ப­டும் கையெ­ழுத்­து­களை முத­ல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்­தில் நடை­பெற உள்ள இளை­ஞர் அணி­யின் மாநாட்­டில் ஒப்­ப­டைக்­கப்­பட உள்ளது. பிறகு முறைப்­படி அறி­வால­யத்­தின் வழி­யாக, அவை குடி­ய­ர­சுத் தலை­வருக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டும். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ”50 நாட்­க­ளில் 50 லட்­சம் கையெ­ழுத்­து­கள் என்று இலக்கு வைத்­துள்­ளோம்.

கையெ­ழுத்­துப் பெறும்­போது எதற்­காக இந்­தக் கையெ­ழுத்­துப் பெறு­கி­றோம் என்­ப­தைப் பொது­மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­ல­வும். தேவை­யெ­னில், நீட் தேர்வை ரத்து செய்­ய­வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்த துண்­ட­றிக்­கை­களைவிநி­யோ­கம் செய்­தும் கையெ­ழுத்­துப் பெற­லாம். இவை தவி­ரக் கல்­லூ­ரி­க­ளுக்கு முன்பு மாண­வர்­க­ளின் கையெ­ழுத்­து­க­ளைப் பெற­லாம். அது இந்த இயக்­கத்தை இன்­னும் மக்­க­ளி­டம் நெருக்­க­மா­கக் கொண்­டு­போய்ச் சேர்க்க உத­வும். திரு­மண மண்­ட­பம் போன்ற இடங்­களை முன்­ப­திவு செய்து, பொது­மக்­களை, மாண­வர்­களை அழைப்­பது போன்ற பணி­களை இப்­போ­தி­லி­ருந்தே தொடங்­கு­மாறு நான் கேட்­டுக்­கொள்­கி­றேன். இந்­தக் கையெ­ழுத்து இயக்­கத்தை வெற்­றி­க­ர­மாக முடிக்க ஒத்­து­ழைப்­புத் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

The post நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம்: சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: