×

மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

டெல்லி: மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி, கடலில் 134 அடி உயரத்தில் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மெரினா கடலில் பேனா வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொதுநலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

The post மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Marina ,Delhi ,Supreme Court ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...