×

மராட்டியத்தில் நிறுத்துமிடம் வைத்திருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்: போக்குவரத்து அமைச்சர் பிரதாப்

மும்பை: மராட்டியத்தில் கார் நிறுத்துமிடம் வைத்திருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிரதாப் தெரிவித்துள்ளார். புதிய கார் பதிவு செய்ய கார் நிறுத்த இடத்தை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்தியாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மஹாராஷ்டிரா அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகரிக்கும் நகரமயமாதல் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மும்பை அரசு போக்குவரத்தை சரி செய்ய புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, சொந்தமாக கார் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் முறையான கார் பார்க்கிங் வைத்திருக்க வேண்டும். வீடுகளில் சரியான வாகன நிறுத்துமிடம் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்க அதிகாரிகள் வீடுகளுக்கு நேரடியாக வந்து சரி பார்ப்பார்கள். அவை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அதிகாரிகள் ஒரு சட்டபூர்வமான வாகன நிறுத்துமிடத்தை வைத்திருப்பதற்கான சான்றிதழை வழங்குவார்கள்.

புதிய வாகனம் வாங்குவதற்கு இந்தச் சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணமாக இருக்கும். இந்த சான்றிதழ் இல்லாமல் புதிய காரை வாங்க முடியாது. இந்த முயற்சியானது, பார்க்கிங் இல்லாமல் சாலையில் கார்களை நிறுத்துவோரை தடுக்கவும், கார் உரிமையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொடுள்ளதாக அரசு கூறுகிறது.

மும்பை, நாக்பூர் மற்றும் புனே போன்ற முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். புதிய கார் வாங்க விரும்பும் நபர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடத்தை வைத்திருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

The post மராட்டியத்தில் நிறுத்துமிடம் வைத்திருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்: போக்குவரத்து அமைச்சர் பிரதாப் appeared first on Dinakaran.

Tags : Transport Minister Pratap ,Mumbai ,Transport Minister ,Pratap ,Marathi ,India ,Dinakaran ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்