மண்ணிவாக்கம் ஊராட்சியில் உரம் தயாரிக்கும் மையத்தில் யுனிசெப் குழு ஆய்வு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பைகள், கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதனை நேற்று 30 பேர் கொண்ட யூனிசெப் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் எப்படி உரம் தயாரிக்கப்படுகிறது. அதனை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து யுனிசெப் குழுவினர் கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து, ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகால் பில்டர் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். இதில், அனைத்து திட்ட பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக ஆய்வு செய்த குழுவினர் ஊராட்சி மன்ற தலைவரை வெகுவாக பாராட்டினர். இந்த ஆய்வின்போது, மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமிசண்முகம், துணை தலைவர் சுமதிலோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர் ராமபக்தன் உட்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக, ஊராட்சிக்கு வருகை தந்த 30 பேர் கொண்ட யுனிசெப் குழுவினரை ஊராட்சி மன்ற தலைவர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

The post மண்ணிவாக்கம் ஊராட்சியில் உரம் தயாரிக்கும் மையத்தில் யுனிசெப் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: