தமிழகத்திலும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. மணிப்பூர் பலாத்கார சம்பவத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பலாத்கார குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். மணிப்பூரில் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத பாஜ கூட்டணி அரசை கலைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
The post மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.