இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஒரு வீடியோ வெளியானது. அங்கே மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிலரைக் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூரில் தொடரும் வன்முறை தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், குறிப்பிட்ட சமூகத்தின் குற்றம்சாட்டின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை விசாரிப்பது கடினம். மனுவில் வன்முறை, போதைப்பொருள் கடத்தல், வனப்பகுதி அளித்தால் என அனைத்தையும் ஒரே மனுவில் குறிப்பிட்டதை ஏற்க முடியாது. குறிப்பிட்ட கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
The post மணிப்பூர் வன்முறை வழக்கு: விசாரிப்பது கடினம்… வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.