மதுரை ஆதீன மடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரை ஆதீன மடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸ் கோயில், மடங்களுக்கு பொருந்தாது என ஆதீனம் தரப்பு தெரிவித்துள்ளது. மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான மதுரை மேல மாசி வீதியில் உள்ள இடத்தை பகவர்லால் என்பவர் வாடகைக்கு பெற்றுள்ளார். வாடகை இடத்தில் கட்டடங்கள் கட்டினால் 10 ஆண்டுக்கு பின் ஆதீனத்துக்கு சொந்தமானது என ஒப்பந்தம் போடப்பட்டது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை ஆதீன மடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: