இதன்படி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் நவ.4ம் தேதி அன்று காலை 6 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்னும் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் அன்றைய தினமே நடைமுறைபடுத்தும் வகையிலும் ஆர்வமுள்ள நடைப்பயிற்சி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், நடைபாதை வழிதடமாக ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வந்தடையும் தூரம் மொத்தம் (8 கி.மி) கொண்ட பாதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறைகள், இருக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகளவில் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் மூலம் மதுரையில் 8 கி.மீ தூரம் நடைப்பயிற்சி: காணொலி மூலம் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.