×

மதுரை முல்லை நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: மதுரை முல்லை நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “முன்னாள் ராணுவ குடியிருப்பு, நேதாஜி மெயின் ரோட்டில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதை கைவிட வேண்டும். 3 இடங்களிலும் சுமார் 5,000 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பகுதியினர் குடிசை மாற்று வாரியத்தில் பணம் கட்டி ரசீது பெற்றுள்ளனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை வெளியேற்றாமல் அவர்களது வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மதுரை முல்லை நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Madurai Mullai Nagar ,K. Balakrishnan ,Chennai ,State secretary of ,Communist Party ,Communist Party of India ,Netaji Main Road ,Madurai ,Mullai Nagar ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை...