இதற்கிடையில் சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது, பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கி வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட விடுதிக் கட்டடத்தை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா ஜெகதீஸ் மற்றும் விடுதி காப்பாளரான புஷ்பா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திடீர் நகர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த வார்டன் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The post மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு!! appeared first on Dinakaran.