இதனால், ஆத்திரமடைந்த முருகன் தகாத வார்த்தைகளால் செல்லப்பனை திட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த முருகன், அருகே கிடந்த ஒரு பெரிய கட்டையை எடுத்து, செல்லப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து, முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வழியே வந்தவர்கள் இதை பார்த்து கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, செல்லப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் செல்லப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்தனர். விசாரணையில், மது அருந்த வாங்கி வந்த ஆம்லெட்டை எடுத்து சாப்பிட்டதால் செல்லப்பனை அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மது அருந்துவதற்கு வாங்கி வைத்த ஆம்லெட்டை சாப்பிட்டதால் மைத்துனரை கொன்ற மாமன்: கல்பாக்கம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.