மகம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் கருப்பு நிற பசுக்களுக்கு உணவு வழங்கவும் செண்பகப்பூ அதிரசம் நெய் சோறு கருப்பு வஸ்திரம் கிழக்கு நோக்கி தானம்ச் செய்ய வாழ்வில் தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
பூரம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் அலரிப்பூ சிவப்புவஸ்திரம் சாமை சோறு நெய் லட்சுமி கோயில் அல்லது பெருமாள் கோயிலில் கொடுத்து வர தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
உத்திர நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் சிவன் கோயிலில் இருக்கும் பசுவுக்கு உணவு வழங்கவும். காய்கறி சிவப்பு சம்பா சோறு குங்குமப்பூ கலந்த சந்தனம் சிவன் கோவிலில் கொடுத்து வரவும் அல்லது கோயிலில் கிழக்கு நோக்கி தானம் செய்ய வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
அஸ்த நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தினமும் வீட்டில் தசாங்கம் தூபம் போட வேண்டும். செஞ்சந்தனம் செவ்வரளிப்பூ, அதிரசம், உளுந்து சாதம் கிழக்கு நோக்கி தானம் செய்ய வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சித்திர நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தினமும் வீட்டில் சாம்பிராணியுடன் மருத மரம் தூள் சேர்த்து தூபம் போட வேண்டும் கதம்ப சாதம் சித்ரா அன்னம் கொழுக்கட்டை பல வர்ணத் துணி மேற்கு அல்லது தெற்கு நோக்கி தானம் செய்ய வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
சுவாதி நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தினமும் வீட்டில் கருங்காலி தூள் சாம்பிராணி உடன் சேர்த்து தூபம் போட வேண்டும். நெல்லிக்காய் அரிசிமாவில் கலந்து சாப்பிடவும். கொடிமல்லி தயிர் சாதம் சந்தனம் இவற்றை மேற்கு அல்லது தெற்கு நோக்கி தானம் செய்ய வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
விசாக நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தினமும் வீட்டில் சாம்பிராணி உடன் சிவப்பு சந்தனத்தூள் சேர்த்து தூபம் போட வேண்டும். குங்குமப்பூ கலந்த நெய் தானம் செய்யவும் மஞ்சள் பட்டு வஸ்திரம் குருவுக்கு தானம் செய்யவும் வாழ்வில் தோஷம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் கொள்ளு தானம், வெல்லம் எள்ளு கலந்து தானம், குங்குமப்பூ கலந்த சந்தனம் வில்வ இலை, சிவப்பு வஸ்திரம் கிழக்கு நோக்கிதானம் செய்ய வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
(பரிகாரங்கள் தொடரும்…)
The post அதிர்ஷ்டங்களை தரும் உயர்நிலைப் பரிகாரங்கள் appeared first on Dinakaran.