×

மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்: மம்தா பானர்ஜி

மேற்குவங்கம்: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட முட்டுக்கட்டையால் கூட்டணியை முறித்து கொண்டுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படும் என மம்தா திட்டவட்டமாக தெரிவித்தார்.

The post மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,West ,Bengal Lok Sabha elections ,Mamata Banerjee ,West Bengal ,Chief Minister ,Trinamool Congress party ,Lok Sabha ,Congress party ,Seat ,Congress ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...