மூட்டு வலியை வழி அனுப்புவோம்!

நன்றி குங்குமம் தோழி

நாற்பது வயதிற்கு மேல் ஆண்-பெண் இருவரும் அவதிப்படுவது மூட்டு வலி பிரச்னைகளால்தான். என்னதான் இயற்கை மூலிகை தைலங்கள் இருந்தாலும், அவைக்கெல்லாம் அந்த வலி கேட்பதில்லை. டாக்டர்களிடம் ஆலோசனைக்கு போனால், மூட்டு தேய்ந்துவிட்டது, மாற்று அறுவை சிகிச்சை செய்யணும்னு ஒரு பெரிய குண்டை தூக்கிப் போடுவார்கள். இது செய்தால் நடக்க முடியுமா, உட்கார முடியுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க… இனி மூட்டு வலியா? பயம் வேண்டாம்… எளிய மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்கிறது மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி. அந்த வளர்ச்சியினை நம் சென்னை மக்களுக்காக அறிமுகம் செய்துள்ளனர் பிரசாந்த் மருத்துவமனை. இங்கு ‘ரோபோடிக்ஸ் மூட்டு மறுசீரமைப்பு’ என்ற அதிநவீன சிறப்பு மையத்தை துவக்கியுள்ளனர்.

அதிநவீன சிகிச்சை முறை குறித்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா பகிர்ந்தார். ‘‘ஒரு புதிய அதிநவீன கூட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக (Joint Reconstruction) நான்காவது தலைமுறை ரோபோவை இந்த சிகிச்சைக்காக அறிமுகம் செய்திருக்கிறோம். மூட்டில் உள்ள பிரச்னையை துல்லியமாக கணித்து 3டி தொழில்நுட்பம் மூலமாக காட்சிப்படுத்துவதால், மூட்டில் உள்ள சிறிய பிரச்னையைக் கூட எளிதாக கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை வழங்க முடியும். குறிப்பாக மூட்டுவலி மற்றும் முழங்கால் மூட்டு பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு மூட்டு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது.

ரோபோ மூலம் செய்யப்படும் மூட்டு மறுசீரமைப்பு அதிநவீன சிறப்பு சிகிச்சையால், துல்லியமான மருத்துவ மற்றும் தனித்துவமான சேவையில் புதிய முத்திரை பதிக்க முடியும். இந்த புதிய அதிநவீன தொழில்நுட்பத்தினால், எலும்பியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தலாம். காரணம், சிகிச்சை முடிந்து சீக்கிரம் குணமடைந்து அவர்கள் தங்களின் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இதன் மூலம் மூட்டு வலி பிரச்னையால் வரும் நோயாளிகளின் வாழ்க்கையில் மறுவாழ்வு ஏற்படுத்த முடியும். அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி சிகிச்சையளிப்பதால், குறுகிய காலத்தில் வலியற்ற குணம் என்பதை சாத்தியமாக்க முடிகிறது.

மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சைக்கான 4வது தலைமுறை ரோபோட்டிக் கருவியான இது எளிமையான மற்றும் பொருந்தக்கூடிய மூட்டு மாற்று அறுவைசிகிச்சை கருவியாகும். அதிநவீன infra-red கேமராக்கள் மற்றும் ஆப்டிக்கல் ட்ராக்கர்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி மூட்டுப் பகுதியின் 3D வரைபடத்தை உருவாக்குகிறது. மேலும் நோயாளியின் உடற்கூறு குறித்த தகவல்களை துல்லியமாக சேகரிக்கிறது.

இதன்மூலம் பிரச்னை என்ன என்பதை துல்லியமாக கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த தொழில்நுட்பத்தினால் மருத்துவர்களால் மூட்டு சார்ந்த‌ பிரச்சனைகளை உடனடியாக கண்டறிந்து, பாதிக்கப்பட்ட எலும்புகளை உடனடியாக அகற்ற உதவுகிறது. இதன் முக்கியமே 30% மேம்பட்ட துல்லிய முடிவினை கண்டறிய முடியும் என்பதுதான். இந்த அறுவை சிகிச்சை முறை அதிக ரத்தப்போக்கு ஏற்படுத்தாமல், குறைந்த வலி மற்றும் நோயாளிகளும் சீக்கிரம் குணமடைய உதவுகிறது’’ என்றார் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா.

தொகுப்பு : பிரியா மோகன்

The post மூட்டு வலியை வழி அனுப்புவோம்! appeared first on Dinakaran.

Related Stories: