சென்னை: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மகளிரை தொழில் முனைவோர்களாக உயர்த்த திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்பொருட்டு தொழில் சார்ந்த பயிற்சி, தொழில் வாய்ப்புகள் குறித்த ஆலோசனை, மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான விவரங்களை வழங்கும் சேவை மையங்களை, “வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” – “மதி சிறகுகள் மகளிர் புத்தொழில் இயக்கம்” உருவாக்கவுள்ளது.
இதற்கு செயல்வடிவம் கொடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தெலங்கானா அரசின் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இச்சேவை மையத்தை பயன்படுத்தி மகளிர் தங்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post வாழ்ந்து காட்டுவோம் திட்டம்: மகளிர் தங்கள் வாழ்வில் சிறக்க உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.