×

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களில் பெயர் மற்றும் பிரிவுகளில் மாற்றம் கொண்டு வந்த ஒன்றிய அரசை கண்டித்தும், புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக சட்டத்துறை சார்பில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை வகித்தார்.

திமுக சட்டத்துறை நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், சந்துரு, மாவட்ட அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புதிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் என்.எஸ்.சி. போஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ கூறும்போது, ‘‘குற்றவியல் நடைமுறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் என இரு தரப்புக்குமே இந்த சட்டங்கள் பாதகமாக அமைந்துள்ளது.

இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை (இன்று) சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அதிமுக வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தலைமையில் அதிமுக வழக்கறிஞர்களும் 3 குற்றவியல் சட்டங்களையும் கண்டித்து ஐகோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,DMK Law Department ,Union Government ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை...