இந்த குற்ற வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பத்திர எழுத்தர் கீதாவிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது டிஎஸ்பி ஆல்பர்ட், கீதாவிடம் குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்காமலும், வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு தனக்கு தனியாக ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று மதியம் சென்ற பத்திர எழுத்தர் கீதா, அங்கிருந்த டிஎஸ்பியிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் டிஎஸ்பி ஆல்பர்ட்டை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் வைத்து டிஎஸ்பியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு டிஎஸ்பி ஆல்பர்ட்டை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச வழக்கில் கைதான டிஎஸ்பி ஆல்பர்ட் சொந்த ஊர் கோவை என்பது குறிப்பிடத்தக்கது.
The post நிலமோசடி வழக்கில் இருந்து பத்திர எழுத்தரை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி டிஎஸ்பி கைது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி appeared first on Dinakaran.