பைக் மீது பேருந்து மோதியதில் கூலி தொழிலாளி பரிதாப பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரமேரூர் அடுத்த பெருநகர் புதுகாலனியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (48). கூலி தொழிலாளி. இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை விஷயமாக புண்ணியமூர்த்தி பைக்கில் பெருநகருக்கு சென்றுவிட்டு, இரவு உத்திரமேரூக்கு திரும்பி கொண்டிருந்தனார்.

அப்போது, உத்திரமேரூர் அடுத்த பங்களாமேடு அருகே, சென்னையில் இருந்து போளூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து, புண்ணியமூர்த்தி பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த புண்ணியமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேரூர் போலீசார், புண்ணியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது பேருந்து மோதியதில் கூலி தொழிலாளி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: