அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த லாரி, அங்கிருந்த வீட்டிற்குள் புகுந்தது. அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் எழிலரசன்(40) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எழிலரசன் பரிதாபமாக இறந்தார். லாரி மோதியதில் வீட்டின் முன்பகுதியும், 2 பைக்குகளும் சேதமடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த எழிலரசனின் உறவினர்கள், பரதராமி-சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post குடியாத்தம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து அரசு பஸ் டிரைவர் பலி appeared first on Dinakaran.