கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணை 50 அடியை எட்டியதால் அணையில் இருந்து 1,066 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்கவோ, இறங்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 735 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.பி. அணைக்கு இன்று 921 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 50.15 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 735 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 16 ஊராட்சி பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

 

The post கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: