×

19 உயா்மட்ட ரயில் நிலையங்களுடன் கோயம்பேடு – பட்டாபிராம் இடையேயான 21.76 கி.மீ. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்!!

சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கோயம்பேடு – ஆவடி – பட்டாபிராம் வழித்தடத்தில் பயணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை கோயம்பேடு – பட்டாபிராம் வரை ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 19 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்புகளுடன் இந்த திட்டம் அமையவிருக்கிறது.கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகா், முகப்போ், அம்பத்தூா், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது.இது அம்பத்தூா் தொழிற்பேட்டை மற்றும் அம்பத்தூா் ஓ.டி. ஆவடி ரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

The post 19 உயா்மட்ட ரயில் நிலையங்களுடன் கோயம்பேடு – பட்டாபிராம் இடையேயான 21.76 கி.மீ. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Koyambedu ,Chennai ,Metro Rail Administration ,Koyambedu-Pattapiram ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...