டெல்லி: பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. அன்னி செலாவணி மோசடிகள் மீது நடவடிக்கை எடுக்க 1973ம் ஆண்டு பெரா சட்டம் கொண்டு வரப்பட்டது. பெரா சட்டத்துக்கு பதிலாக 2000ம் ஆண்டில் பெமா சட்டம் கொண்டு வரப்பட்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. பெரா சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட சுமார் 500 வழக்குகள் பல நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன.
500 வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட பலர் உயிருடன் இல்லை, அல்லது கண்டுபிடிக்க இயலவில்லை. வழக்குகளில் தொடர்புடைய சொத்துகளும் விற்கப்பட்டுள்ளதால் 500 வழக்குகளையும் மார்ச்சுக்குள் முடித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
