ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு ஆகாய நடைமேடை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்திருந்தது. அதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் முறைப்படி ஒப்புதல் அளித்தது.
இதற்கு ரயில்வேயும் அனுமதி அளித்தது. இதன்படி, ரூ.20 கோடி செலவில் இங்கு ரயில் நிலையம் அமைய போகிறது. இந்த ரயில் நிலையம் அமைப்பதற்கான முழு செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கட்டுமான பணிக்காக ரயில்வே நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 40 லட்சம் வழங்கி உள்ளது.ஓப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் ஓராண்டில் புறநகர் ரயில் நிலைய கட்டுமான பணியை முடிக்க திட்டமிடப்பட்டது.
The post கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம்… கட்டுமான பணிக்காக ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ. 40 லட்சம் வழங்கியது தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.