
நெல்லை: நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கவினை படுகொலை செய்த சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் தாயை கைது செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தனது சகோதரியை காதலித்ததால் பட்டியலின இளைஞர் கவினை சுர்ஜித் படுகொலை செய்தார். சுர்ஜித் சரணடைந்த நிலையில் உதவி ஆய்வாளர்களான அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தப்பட்டது.
The post கவின் உடலை வாங்க 4வது நாளாக உறவினர்கள் மறுப்பு..!! appeared first on Dinakaran.
