- திண்டுக்கல் கருப்பனசாமி கோயில்
- தலைமை நீதிபதி
- G.R.
- சுவாமிநாதன்
- மதுரை
- திண்டுக்கல்
- மண்டு
- கருப்பனசாமி கோயில்
- உயர் நீதிமன்றம்
- மண்டு கருப்பனசாமி கோயில்
மதுரை: திண்டுக்கல் மண்டு கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மண்டு கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு நடத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்திரபால்றாஜ் சார்பில் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயிலை திறந்து பூஜைகள் செய்யவும் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை என கூறிய மனுதாரர் தொடர்ந்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதில் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த போது, உள்ளூர் நிலவரம் சாதகமாக இல்லை என்று கூறினார். ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்ற முடியுமா முடியாதா என நேரடியாக பதில் அளிக்குமாறு ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார். இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மண்டு கருப்பண்ணசாமி கோவிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இதேஅமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
