காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி

சென்னை: காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்வானது தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளம் பதிவு: “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உயரிய கருப்பொருளோடு, இன்று (நேற்று) தொடங்கும் மூன்றாவது காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்வானது, தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். பல நூற்றாண்டு கால கலாச்சார உறவினை மேம்படுத்துகின்ற நல் நோக்கோடும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூற்றோடும், தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்பெருவிழா நிகழ்ந்திட வழிவகுத்து, அதற்கான வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: