சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து பறிக்கப்பட்டு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பிடம் வழங்க வேண்டும். அப்போது தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அதன் உண்மையான பொருளுடன் செயல்படுத்தப்படும் என்பது உறுதி. பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்துக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post கர்நாடகாவிடம் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.