இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியது. இதனால் ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீரை கடந்த 29ம் தேதி பூண்டி ஏரிக்கு அனுப்பாமல், கும்மிடிபூண்டி அருகே உள்ள கண்ணன் கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு திருப்பிவிட்டனர். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் முதல் பூண்டி ஏரிக்கு ஜீரோ பாயிண்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு இதுவரை 3900 மில்லியன் கன அடி தண்ணீர் அதாவது 3.9 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் கடந்த மே மாதம் 1ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக ஆந்திர அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு இதுவரை 3900 மில்லியன் கன அடி தண்ணீர் அதாவது 3.9 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.
The post கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்: ஆந்திர அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.